கொங்கு செழித்தால்...!!எங்கும் செழிக்கும்...!!!
இது கொங்கு வேளாள கவுண்டர் சொந்தங்களின் குழுமம்
Description
ஒரு சாதியின் முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும் சங்கம் பயன்படுமேயானால், அதை நாம் வரவேற்க வேண்டும். கொங்கு வேளாளர்களிடையே முன்னேற்றத்தையும், கொங்கு நாட்டு மக்களிடையே ஒற்றுமையும் ஏற்படுத்துவதே நமது நோக்கமாகும்.
இந்தியா என்பது கிராமங்களில்தான் உள்ளது. அந்த கிராமத்து உயிர்களால் தான் நாடே வாழ முடியும் என்பது அடிப்படை உண்மை. இது பெரிய படிப்பாளிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இன்னமும் கிராம மக்களுக்கு முன்னேற்றம் என்பது கனவாகவே உள்ளது. ஆட்சியாளர்கள் விவசாயத்தை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வில்லை. நம்முடைய பரம்பரை தொழிலே விவசாயம் தான். ஒரு காலத்தில் விவசாயத் தொழிலுக்கு மதிப்பும், மரியாதையும், பெருமையும் இருந்தது. வள்ளுவர் கூட உலகமே உழவர்கள் பின்னால் இருப்பதாக கூறினார். ஆனால், இன்றைக்கு இருக்கின்ற தொழில்களிலே மிகவும் மோசமான தொழிலாக விவசாயம் வந்து விட்டது. இந்நிலை மாற வேண்டும். மேலும் இந்தியாவின் ஒரு பகுதி மழை பெய்து வெள்ளத்தால் அழிகிறது. மற்றொரு பகுதியில் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். எதிர்கால நோக்கத்தோடு திட்டமிட்டு செயல்படும் ஆட்சி இல்லாததுதான் இதற்கு காரணமாகும்.
தமிழ்நாட்டு மக்கள் தொகையில் சாதிவாரியாக கணக்கெடுத்து அந்த மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் கொடுக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் பெரும்பான்மையாக உள்ள நமது இனத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பணிகளில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலும், அரசின் நலத் திட்டங்களும் நம்மை முழுமையாக வந்து சேரும்.
எனவே கொங்கு வேளாளர்களின் முன்னேற்றத்திற்காகவும், நமது உரிமைகளை மீட்கவும், பெருமைகளை காக்கவும் ஒன்றுபடுவோம். பேரவை தோன்ற விதை போட்ட கோவை செழியனாரை நினைத்து வணங்குவோம். . .
- கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை நிறுவனர் கோவை செழியன் அய்யா அவர்கள். . .