இரண்டு நாட்களுக்கு ஒருமுறை லாபம் தரும் வெண்டை!
தஞ்சை மாவட்டத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையை சமாளித்து பயிர் செய்ய, சூரக்கோட்டை விவசாயி வீரபாண்டியன் கையாண்ட மாற்றுவழிதான் வெண்டை சாகுபடி. அதைக் குறித்த அவரது அனுபவங்கள்:
முதலில் தொழு உரம் போட்டு, நன்றாக உழுது, பின் ஒரு அடி இடைவெளியில் 11/2 அடி அகலத்திற்கு பார் அமைத்து, நீர் பாய்ச்சி, பாரின் ஓரத்தில் ஒரு அடி இடைவெளியில் வெண்டைக்காய் விதைகளை ஊன்றினேன். அரை ஏக்கர் நிலத்திற்கு ஒன்றரை கிலோ விதைகள் தேவைப்படும். A1 ஆந்திரா ரக விதையைத்தான் பயிரிட்டுள்ளேன். விதை விதைத்த 45-ஆம் நாளிலிருந்து அறுவடை செய்யத் துவங்கலாம். தொடர்ந்து 3 மாத காலம்வரை வெண்டை காய்க்கும்.
பயிர்ப் பாதுகாப்பு முறை
பயிர் செழுமையாக வளர்வதற்கு ஒவ்வொரு செடிக்கும் 10 கிராம் வீதம் கலப்பு உரம் இடவேண்டும். அரை ஏக்கர் நிலத்திற்கு மொத்தமாக 3 மூட்டை கலப்பு உரம் தேவைப்படும். பயிரிட்ட 15 நாட்களில் ஒருமுறையும், அதன்பின் மாதம் ஒருமுறையும் இந்தக் கலப்பு உரத்தை செடிகளுக்கு இட்டு வந்தால் பயிர் நன்றாக வளர உதவும், காய்களும் திடமாக இருக்கும்.
நோய்த் தாக்குதால் தென்பட்டால், ஒரு முறை இமேடா நோய் மருந்தை பயிர்களுக்குத் தெளித்து விட்டால், நோய்த் தாக்கு அறவே இருக்காது. தவிர, வாரம் ஒரு முறை செடிகளுக்கு மிதமான நீர் பாய்ச்ச வேண்டும். இப்படிச் செய்தால் செடிகள் பசுமையாக இருக்கும், மகசூலும் பெருகும். அரை ஏக்கரில் வெண்டை பயிர் செய்ய 10 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். 2 நாட்களுக்கு ஒருமுறை 80 கிலோ வெண்டைக் காய்களை அறுவடை செய்து வருகிறேன். ஒரு கிலோ 20 முதல் 22 ரூபாய் வரை விற்பனை ஆகின்றன. இப்படி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 1,000 முதல் 1,200 வரை வருவாய் கிடைக்கிறது.
சந்தை வாய்ப்புகள்
நம் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கும் நாட்டுக் காய்கறிகளில் ஒன்று இந்த வெண்டை என்பதால், எப்போதும் இதன் தேவை அதிகமாகவே உள்ளது. பெரும்பாலும் தஞ்சையில் உள்ள சந்தையில் வியாபாரிகளும், இடைத்தரகர்களும் மூடை மூடையாக வாங்கிச் செல்கின்றனர்.
டிப்ஸ்
வெண்டையை ஊடுபயிராகவும் பயிரிடலாம். மேலும் இதை 2 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்து லாபம் பெற முடிவதால், விவசாயிகளின் அன்றாடச் செலவிற்கும் கை கொடுக்கும்" என்று கூறினார். தொடர்புக்கு: 044-2747 4348

No comments:
Post a Comment